Home /namakkal /

பெற்றோருக்காக உயிரை மாய்த்த சிறுவன்.. குமாரபாளையம் அருகே விநோத திருட்டு - நாமக்கல் மாவட்ட செய்திகள் சுருக்கமாக..

பெற்றோருக்காக உயிரை மாய்த்த சிறுவன்.. குமாரபாளையம் அருகே விநோத திருட்டு - நாமக்கல் மாவட்ட செய்திகள் சுருக்கமாக..

நாமக்கல் மாவட்டத்தில் (17.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (17.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் 17.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 17.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    பெற்றோர்கள் சேர்ந்த வாழ வேண்டும் என்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மகன்!

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ரவிச்சந்திரன் இவரது மனைவி மேகலா இவர்களுக்கு நர்மதா என்ற மகளும், தருண் 17 வயது என்ற மகனும் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தருண் அவரது தாய் மேகலா உடன் வசித்து வருகிறார். தருண் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்வது தருணுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எனது சாவிலாவது பெற்றோர் இணைந்து வாழவேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விரக்தியில் இருந்த தருண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    சாமி தரிசனம் செய்ய மறுக்கப்பட்ட தம்பதி

    நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பிரம்மலிங்கேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சவுந்தர் - சர்மிளா தம்பதியினர் சென்றுள்ளனர். அங்கு கோயிலில் செல்ல இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் சவுந்தர் சர்மிளா தம்பதியினரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர்கள் என கூறி கோயிலில் வழிபாடு செய்ய பழனியப்பன் என்பவர் தடுப்பது குறித்து விடியோ வெளிவந்துள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லை.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து35 காசுகள் அதிரடியாக உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை உயர்வு சந்தித்து 4 ரூபாய் 50 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி வேலை நிறுத்தம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் விசைத்தறி தொழில் நூல் விலை உயர்வு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று முதல் மே21ம் தேதி வரை விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கலில் பல்வேறு பகுதிகளில் மழை

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியது. மேலும் மாலை நேரத்தில் திடிரென பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குமாரபாளையம் அருகே விநோத திருட்டு!

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேதாந்தபுரம், குள்ளங்காடு பகுதிகளில் உள்ள மக்கள் காலையில் குடிநீர் பிடிக்க வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்த போது குடிநீர் குழாயின் பெண்டு டேப்கள் ஆகியவை சுமார் 30 வீடுகளுக்கும் மேல் திருடப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் இதேபோல் பல பகுதிகளில் திருட்டு நடந்துள்ளது. இது போன்ற நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    நாமக்கல் மாவட்டத்தில், பிற்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தூய்மைப் பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதிஉதவி

    நாமக்கல், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள், வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம். திட்டம் தொடர்பான ஆலோசனைக்கு, 88707 57380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நாமக்கல்லில் புதிய சந்தை அமைக்கும் பணி தொடக்கம்

    நாமக்கல் நகராட்சி அலுவலகம் பின்புறம் தினசரி மற்றும் வாரச்சந்தை உள்ளது. இங்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 69 லட்சம் செலவில் புதிய சந்தை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதை அடுத்து அங்கு கடை வைத்துள்ள 160 வியாபாரிகளுக்கும் சந்தையின் முன்பு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு கடை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர். புதியதாக அமைக்கப்படும் சந்தை வளாகம் நவீன வசதிகளுடன் 172 கடைகள் ஒரே குடையின் கீழ் என்ற வகையில் பிரம்மாண்ட ஷட்டருடன் அமைக்கப்படுகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி