Home /namakkal /

நாமக்கல் விசைத்தறி நெசவாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 50 சதவீத மானியம்... மிஸ் பண்ணாதீங்க

நாமக்கல் விசைத்தறி நெசவாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 50 சதவீத மானியம்... மிஸ் பண்ணாதீங்க

மாதிரி படம்

மாதிரி படம்

NAMAKKAL : நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்துடன் மின்னணு பலகை வழங்கும் திட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
50 சதவீதம் மானியத்துடன் மின்னணு பலகை வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசைத்தறி நெசவாளர்களின், ஜவுளி உற்பத்தி திறனை அதிகரிக்க, தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சொந்தமாக விசைத்தறிகள் உள்ள கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாராத விசைத்தறி நெசவாளர்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சம் 5 விசைத்தறிகளுக்கு (2 விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை) மின்னணு பலகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.! 

விண்ணப்பதாரர்கள், கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம், ஈ.காட்டூர், எலந்தகுட்டை அஞ்சல், குமாரபாளையம் தாலுகா, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியில், விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை, மின் பயனீட்டாளர் அட்டை மற்றும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் விசைத் தறிகளுக்கு கட்டிட உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தத்துடன்,  செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி