முகப்பு /நாமக்கல் /

கூன் வண்டு தாக்குதலை சாமாளிப்பது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

கூன் வண்டு தாக்குதலை சாமாளிப்பது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகள்

தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகள்

Namakkal News | ஆர்வம் உள்ள விவசாயிகள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மார்ச் 10-ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தின் கேவிகே தலைவர் டாக்டர் அழகுதுறை வெளியிட்ட அறிக்கையில், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் ஒருங்கிணைந்த முறையில் கூன்வண்டு மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் தென்னை மரங்களை தாக்கும் கூன்வண்டின் சேதத்தின் அறிகுறிகள் அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் அதாவது உளவிய முறை ரசாயன முறை மற்றும் உயிரியல் முறை கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் விவசாயிகள் விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள் பணியாளர்கள் ஊரக மகளிர் இளைஞர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் 04286,266650 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் வரும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Local News, Namakkal