ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மோகனூரில் குதிரை ரேக்ளா பந்தயம்.. ரொக்கப்பரிசுகளை அள்ளிய வெற்றியாளர்கள் விவரம்.!

நாமக்கல் மோகனூரில் குதிரை ரேக்ளா பந்தயம்.. ரொக்கப்பரிசுகளை அள்ளிய வெற்றியாளர்கள் விவரம்.!

X
குதிரை

குதிரை ரேக்ளா பந்தயம்

Mohanur Horse Rekla Race | நாமக்கல் மாவட்டம் மோகனூரில், திமுக இளைஞரணி சார்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த விழாவை மாநிலங்களவை உறுப்பினர், கே, ஆர், என், ராஜேஷ் குமார், தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான குதிரைகள் பங்கேற்று ஓடின.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான குதிரை ரேக்ளா பந்தயங்கள் போட்டிகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் மோகனூரில், திமுக இளைஞரணி சார்பில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த விழாவை மாநிலங்களவை உறுப்பினர், கே, ஆர், என், ராஜேஷ் குமார், தொடங்கி வைத்தார்,

இதில் பெரிய குதிரை, சிறிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பந்தயம் பெரிய குதிரைக்கு 16 கிலோ மீட்டரும், சிறிய, குதிரைக்கு, 12 கிலோமீட்டர், புதிய குதிரைகளுக்கு 10 கி.மீ தூரமும் சென்று வரும் வகையில் நடைபெற்றது,

இதில் பெரிய குதிரை பிரிவில் முதல் பரிசாக கோவை கோகுல் ரூ. 25 ஆயிரமும், 2-ம் பரிசாக சேலம் சந்திரன் ரூ. 20 ஆயிரமும், 3-ம் பரிசாக ஈரோடு சதீஸ், ரூ. 15 ஆயிரமும், இதே போல் சிறிய குதிரை பிரிவில் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரத்தை கேசவன் குரூப்ஸ், 2-ம் பரிசாக ரூ. 15 ஆயிரத்தை பிரகாஷும், 3-ம் பரிசாக ரூ. 10 ஆயிரத்தை பழனி,  எஸ், எம், ஏவும் பெற்றனர்.

புதிய குதிரைகள், போட்டி இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. அதில் முதல் பிரிவில், முதல்பரிசு ரூ, 15 ஆயிரத்தைகோவை பண்ணாரி அம்மன் குதிரையும், 2ம் பரிசைசேலம் பெரியாண்டிச்சி அம்மன் குதிரையும், மூன்றாவது பரிசு ரூ.6,ஆயிரம், சேலம் கொல்லப்பட்டி அணி குதிரையும் பெற்றது.

இரண்டாம் பிரிவில், முதல் பரிசு, 15 ஆயிரம் ஈரோடு பால்காரர், இரண்டாம் பரிசு 10 ஆயிரம் கோவை மரப்பாலம் அசோக், மூன்றாம் பரிசு 6 ஆயிரம், கோவை பில்லா குதிரை யும்பெற்றது வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது,

வெற்றி பெற்ற குதிரைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் கே.ஆர்.என், ராஜேஷ் குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள், இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Horse race, Local News, Namakkal