முகப்பு /நாமக்கல் /

குமாரபாளையம் டூ ஆவத்திபாளையம்.. நாமக்கல்லில் களைகட்டிய குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்..

குமாரபாளையம் டூ ஆவத்திபாளையம்.. நாமக்கல்லில் களைகட்டிய குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்..

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் களைகட்டிய குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் குமாரபாளையம் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு முன்னாள் அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் குமாரபாளையம் நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குதிரை வண்டி ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த குதிரை ரேக்ளா பந்தயமானது புதிய குதிரை, 44 இஞ்ச் குதிரை மற்றும் பெரிய குதிரை என 3 பிரிவுகளில் நடைபெற்றது.

தலா ஒவ்வொரு பிரிவிலும் 15 குதிரைகள் கலந்துகொணடன. இந்த ரேக்ளா பந்தயத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை மதுரை என தமிழகம் முழுவதும் இருந்து குதிரைகளும், ஜாக்கிகளும் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு பந்தய தூரமாக நிர்ணயம் செய்யபட்டது.

இதையும் படிங்க : தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம்.. கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு..

வெற்றி பெற்ற குதிரைகள் :

இதில் புதிய குதிரை வகையில் குமாரபாளையம் கற்பக விநாயகர் குதிரை முதல் பரிசையும், நாமக்கல் அழகுமயில் குதிரை 2வது பரிசும், கோவை மாப்பிள்ளை செவலை சிங்கம் குதிரை 3ம் பரிசினையும் பெற்றன. 44 இஞ்ச் குதிரை வகையில் குமாரபாளையம் கற்பக விநாயகர் கோயில் குதிரையும் முதல் பரிசையும், 2ம் பரிசை திருச்சி சாதிக் பாய் குதிரையும், 3ம் பரிசை நாமக்கல் சிங்காரவேல் குதிரையும் தட்டிச் சென்றன.

பெரிய குதிரை வகையில் தம்பி சூரியன் திருச்சி குதிரை முதல் பரிசையும், கோவை பாமா 2வது பரிசையும், சேலம் லட்சுமி குதிரை 3ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற குதிரை மற்றும் ஜாக்கிகளுக்கும் பணம் முடிப்பும், சுழற் கோப்பைகளும் அதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வழங்கினார்.

First published:

Tags: Local News, Namakkal