Home /namakkal /

நாமக்கலில் மக்களைக் கவர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

நாமக்கலில் மக்களைக் கவர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சியில் மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து குமாரமங்கலம் செல்லும் வழியில் உள்ள P.V. வேலுசாமி திருமண மண்டபத்தில் மக்களை வாங்க தூண்டும் வகையில் கண்கவரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    திருச்செங்கோடு ஷாப்பிங் திருவிழா என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட அரங்குகள் ஏற்பாடு செய்து பல விதமான முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தன.

    குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி கண்காட்சிக்கு வருபவர்களுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் பொருட்களையும் மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி


    கண்காட்சிக்கு வரும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. பெரியவர்கள் விளையாடும் வகையிலும் ஏராளமான விளையாட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது மக்களை வெகுவாக கவர்ந்தது.

    குழந்தைகளுக்கான நீர் விளையாட்டு


    இந்த கண்காட்சியில் பேய் வீடு, விண்ணுலகம், விண்வெளி கண்காட்சி, குழந்தைகளுக்கான படகு சவாரி, 3D விளையாட்டுகள், வீட்டு உபயோக பொருட்கள் என மக்களை கவர்ந்து‌ இழுக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று இருந்தன.

    கண்காட்சியில் திரண்ட மக்கள்


    மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் மக்கள் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பார்வையிட்டு அதனை தள்ளுபடி விலையில் வாங்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக உணவு திருவிழாவில் பல விதமான உணவுகள் மற்றும் சைனீஸ் உணவுகள், சிறுதானிய உணவு வகைகள் இருந்தது. புதியதாக ஆதார் கார்டு பதிவு செய்ய விரும்புபவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி காண சுற்று வட்டார மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி