முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் தமிழர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்!

நாமக்கல்லில் தமிழர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்!

X
ஹோலி

ஹோலி பண்டிகை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

Holi festival 2023 | நாமக்கல் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களுடன் இணைந்து உலக மகளிர் தின விழா மற்றும் ஹோலி பண்டிகை விழாவினை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் மகளிர் தினவிழா மற்றும் ஹோலி பண்டிகை விழாவை தமிழர்களுடன் சேர்ந்து வடமாநிலத்தவர்கள் கொண்டாடினர்.

நாமக்கல் நகர காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மோகன் மாநில ஓபிசி துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் நாமக்கல் காவிரி பீட்ஸ் வளாகத்தில் உலக மகளிர் தின விழா மற்றும் ஹோலி பண்டிகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இறைவனை வழிபட்ட பிறகு கோழிப்பண்ணை மற்றும் பல இடங்களில் பணிபுரியும் வடநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் தங்களுக்குள்ள அன்பை பரஸ்பரத்தை வெளிப்படுத்தும் விதமாக வண்ண மாவுகளை பூசி மகிழ்ந்தனர்.

பின்னர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். தமிழகத்தில் அதிக அளவில் வட மாநிலத்தவர் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுடன் தமிழர்கள் அன்பை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் சேர்ந்து இந்த விழாவை கொண்டாடினர்.

First published:

Tags: Local News, Namakkal