ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம் இதோ...

மின்தடை

மின்தடை

Namakkal Power Cut : நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை  (புதன்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) அக்டோபர் 26ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என்று பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown