Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (13.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (13.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 13.05.2022 ஃநேற்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 13.05.2022 நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    சாய்ந்த நிலையில் நிற்கும் மின்கம்பம்- விபத்து ஏற்படும் அபாயம்!

    SPB காலனி பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள சாலையின் நடுவில் வரிசையாக மின்விளக்கு கம்பங்கள் இருக்கிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து உள்ளது. இதனால் சாலையின் நடுவில் உள்ள மின்விளக்கு கம்பம் ஒன்று அடியில் சேதமடைந்து சாய்ந்து நிலையில் இருக்கிறது. மேலும் சாய்ந்த நிலையில் உள்ள மின்விளக்கு கம்பத்தை தற்போது வரை சரிச்செய்யாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முட்டைக்கோழி விலை உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூபாய் 75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன் தினம் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூபாய் 5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முட்டைக்கோழி விலை கிலோ ரூபாய் 80 அதிகரித்துள்ளது.
    மேலும் கறிக்கோழி விலை மாற்றம் செய்யப்படாமல் ரூபாய் 127 என்று அதே விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

    மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    நாமக்கல் மாவட்டம் தெற்குப் பாளையம் என்ற ஊரில் காலம் காலமாக முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த மகா கணபதி மற்றும் மகா மாரியம்மன் கோயில் புதிதாக புனரமைக்கப்பட்டு திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மண்டலத்தில் விலை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 25 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து 3 ரூபாய் 90 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கலில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை-மக்கள் மகிழ்ச்சி

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது.  இதனால் குளிர்ச்சி சூழல் நிலவியது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

    நாமக்கல் மாவட்டம் வையப்பமலை அருகே தனியார் பேருந்தும் ஒன்று திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக   வந்த கார் ஒன்றும் இருசக்கர வாகன ஒன்றும் சாலை கடக்க முயன்று உள்ளது. இதனால் இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க  காரை திருப்பியபோது எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    வேளாண்மை சந்தையில் நடைபெற்ற கொப்பரை ஏலம்

    பரமத்தி வேலூர் அருகே மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நடைபெற்ற ஏலத்துக்கு 14, 429 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.  அதிகபட்சமாக கிலோ ரூபாய் 88. 99-க்கும், குறைந்தபட்சமாக ரூபாய் 72. 25-க்கும், சராசரியாக ரூ. 85. 79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 82 ஆயிரத்து 455 -க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.

    நில அளவைப் பயிற்சி

    சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பட்டா மாறுதல்,  புத்தாக்க நில அளவை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் பரப்பு கணித்தல் பயிற்சி, இணையதளத்தில் பட்டா மாறுதல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான  பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் சேந்தமங்கலம் தாலுகா பகுதியில் உள்ள வி. ஏ. ஓ. க்கள் கலந்து கொண்டனர்.

    ரேசன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம்!

    நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேசன் கார்டு, செல்போன் நம்பர் பதிவு மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரேசன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் இன்று( 14ம் தேதி) காலை 10 மணிக்கு நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுக்கா வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் ரேசன் கார்டு சம்மந்தமான குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி