Home /namakkal /

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்.. நடமாடும் மருத்துவமனை.. - நாமக்கல் மாவட்ட செய்திகள் (மே 20)

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்.. நடமாடும் மருத்துவமனை.. - நாமக்கல் மாவட்ட செய்திகள் (மே 20)

நாமக்கல் மாவட்டத்தில் (19.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (19.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    பேரறிவாளன் விடுதலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாமக்கலில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணிகள் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வன்முறையை எதிர்ப்போம் கொலை ஒரு தீர்வாகாது போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கைது

    நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியில் பட்டியலின சமுதாய தம்பதியினரை, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து, சி. பி. எம். கட்சியின் சார்பில் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பூஜையில் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

    மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்

    நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு
    9 ஆயிரத்து 729 மாணவர்கள்,  10 ஆயிரத்து 138 மாணவிகள்,  472 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 20 ஆயிரத்து 339 பேர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர். 82 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் கண்காணிக்க 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தேர்வு மையங்களில் மாணவர்களிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாமக்கல்லில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியது. மேலும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் திடிரென பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நடமாடும் மருத்துவமனை

    நாமக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் நடமாடும் மருத்துவ வாகனத்தை அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வாகனம் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தினந்தோறும் ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை ரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவு தொற்று நோய் அறிகுறி ஆகியவை குறித்து பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி