நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ள தனியார் விண்ணப்பிக்கலாம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல், அரசு கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான, விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் (டிஎன்சிஎஸ்சி) அரவை முகவர்கள் (முழு நேர மற்றும் பகுதி நேரம்) மற்றும் கார்ப்பரேசனில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. ஆகையால் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்கள் தங்களது விருப்ப கடிதத்தினை டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மின்சாரம் இல்லா மருத்துவ எந்திரம்
திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மெடிக்கல் எலக்ட்ரானிக் துறையில் பயிலும் மாணவர்கள் சபரிநாதன், சுகுமார், விக்னேஷ் மற்றும் விகாஸ் ராஜ் குழுவாக இணைந்து மரத்தில் செய்யப்பட்ட மின்சாரம் இல்லா மிதி செக் குருலை மருத்துவ எந்திரத்தை கண்டு பிடித்து செயல்பாட்டுக்கு மற்றும் கல்லூரியில் மாணவர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
2 மையங்களில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் இந்தாண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கியது. நாளையுடன் சனிக்கிழமை தேர்வு முடிவடைகிறது. இதனையடுத்து வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிடப் பட்டுள்ளது.
இலவச திறன் பயிற்சி முகாம்
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பிரதமரின் கௌசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுக் கழகம் போன்ற திட்டங்களில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநர், உதவி செவிலியர், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கு ஏதுவாக இந்தப் பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக சனிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பயிற்சி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி யூனியன் கடந்த 5 நாட்களாக அமைப்புசாரா தொழிலாளர்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பவுத்திரம், அலங்காநத்தம் சிவந்திப்பட்டி சிறு குறு விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்பவர்கள் தொழிலாளர்களின் திட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதுவரை 1.10 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
மண் மாதிரி சேகரித்தல் குறித்த பயிற்சி
பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கட்ட மண் மாதிரி சேகரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
சமூக நலத்துறை நிர்வாகிகள் ஆய்வு
குமராபாளையம் எதிர் மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூகநலத்துறை நிர்வாகி ஆய்வு செய்தார். மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முறையான உணவு மூன்று வேளையும் வழங்கப்படுகிறதா, மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.