Home /namakkal /

கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!

கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் (20.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (20.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 20.05.2022 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 • Last Updated :
  நாமக்கல் மாவட்டத்தில் 20.05.2022 அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்

  நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை சில இடங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கோழியின பரிசோதித்ததில் பெரும்பாலும் அவை பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. பண்ணையாளர்கள் கோழிப்பண்ணையில் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும். சீரான இடைவெளியில் வெள்ளை கழிச்சல் நோய்க்கான லசோட்டா தடுப்பூசியை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முட்டை கழிவுகள்

  கருப்பட்டிபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே மினி லாரி ஒன்றில் இருந்து முட்டை கழிவுகளை சிலர் சாலையோரம் கொட்டி கொண்டு இருந்தனர். துப்புரவு அலுவலர்‌கள் மினி லாரி உரிமையாளர் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. லாரியின் உரிமையாளர் அபராதத்தை செலுத்தியதை அடுத்து மினி லாரியை நகராட்சி அதிகாரிகள் விடுவித்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

  நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வசதி வழங்குதல், பாம்பு கடித்து இறக்கும் விவசாயிகளுக்கு வயது வரம்பின்றி இழப்பீடு வழங்குதல், பால் கொள்முதல் விலையை உயர்த்துதல், விவசாயிகளை பயிர்களுக்கு காப்பீடு செய்ய நிர்ப்பந்திக்க கூடாது என பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

  உண்ணாவிரத போராட்டம்

  திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பிரிதி ஊராட்சியில் பா.ஜ.க. நிர்வாகி விசுவநாதன் மற்றும் அவருடைய தாயார் சரஸ்வதி ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  குரூப் 2 தேர்வு முன்னேற்பாடுகள்

  நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 தேர்வு மையங்களில் 15, 357 தேர்வர்களும், ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 29 தேர்வு மையங்களில் 8, 574
  தேர்வர்களும், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 26 தேர்வு மையங்களில் 7, 923 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வர வேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சாலை விரிவாக்க பணிகள்

  சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை சாலை அகலப்படுத்தும் பணி பள்ளிபாளையத்தில் இருந்து ஆலாம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது. இந்த பணிகளை சென்னை கன்னியாகுமரி வழித்தட திட்ட அரசு தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

  நகர மன்ற தலைவருக்கு கார் வாங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்
  நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் வாகனம் வாங்குவது பேசப்பட்டது. அப்போது நகராட்சி நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் வாகனம் எதற்கு என்று கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதேபோல் திருச்செங்கோடு நகர் மன்ற கூட்டத்திலும் வாகனம் குறித்து பேசப்பட்டது. அங்கும் வாகனம் வாங்கவது குறித்து பேசுகையில் சலசலப்பு ஏற்பட்டது.

  நூல் விலை உயர்வு கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டம்

  வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகே சேலம் மண்டல விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நூல் விலையைக் கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதைக் கண்டறிந்து அரசு வெளிச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதுடன், துணியாக மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் போன்ற
  கோரிக்கைகள் வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான விசைத்தறியாளர்கள் கலந்து கொண்டனர்.

  நாமக்கல்லில் மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாமக்கல்லில் மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு மின்வாரிய பிரிவு அலுவலக பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவசமாக மின்சார விளக்கு, விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

  கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

  மோகனூர் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த பூவரசன் மோகனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பூவரசன் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்த போது பூவரசன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் நீச்சல் தெரியாத காரணத்தால் கிணற்றில் மூழ்கி பூவரசன் உயிரிழந்தார்.
  First published:

  Tags: Namakkal

  அடுத்த செய்தி