Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் (16.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (16.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் 16.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மாவட்டத்தில் 16.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிரடியாக உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து35 காசுகள் அதிரடியாக உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை உயர்வு சந்தித்து 4 ரூபாய் 50 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நூல் கட்டுபடுத்த கோரி வேலை நிறுத்தம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் விசைத்தறி தொழில் நூல் விலை உயர்வு உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நூல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இன்று முதல் மே21ம் தேதி வரை விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கர் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல்

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் பட்டயத்தான்குட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் பத்து நாட்களுக்கு முன்பு
    தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்துள்ளார். தன்னுடைய கணவரை உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார் அவருடைய மனைவி. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் - உற்சாக வழிபாடு

    பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்று உற்சாக வழிபாடு நடத்தினர்.ரோனா பெருந்தொற்று பொது முடக்கத்திற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக பௌவுர்ணமி முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

    தேசிய டெங்கு தடுப்பு தின விழா

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருச்செங்கோடு நகராட்சியில் தேசிய டெங்கு தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது, நகராட்சி ஆணையாளர் கணேசன் தலைமையில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன், பொறியாளர் சண்முகம், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கல்விகரசன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் டெங்கு தடுப்பு தின உறுதி மொழி எடுத்து கொண்டனர்

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    தீ தடுப்பு விழிப்புணர்வு

    கொல்லிமலையில் உள்ள விரகனூர் ஊர்முடி உள்ளிட்ட பகுதியில் இருந்து மலைவாழ் மக்கள் தினமும் தங்கள் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்காக அடிவாரப் பகுதியான எருமப்பட்டி கோம்பை வனப்பகுதி வழியாக ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் வழியில் பீடி சிகரெட் தீப்பெட்டி உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும், பாதையில் அடிக்கடி விபத்து நடப்பதால் இதனை தடுக்கும் நடவடிக்கையாக மலைவாழ் மக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    நாமக்கலில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. இதனால் இன்று வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    உழவர் சந்தையில் தக்காளி விலை விலை உயர்வு!

    நாமக்கல் உழவர் சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இங்கு ஒரு கிலோ தக்காளி விலை உயர்வு சந்தித்து ரூபாய் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலி

    பரமத்தி வேலூர் அருகே குமரன் என்பவர் மரவாபாளையத்தில் இருந்து வேலூர் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குமரன் மீது மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதன் பின் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி