Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் (14.05.2022) இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்... 

நாமக்கல் மாவட்டத்தில் (14.05.2022) இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்... 

நாமக்கல் மாவட்டத்தில் (14.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (14.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 14.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிரடியாக உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 25 காசுகள் அதிரடியாக உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து 4 ரூபாய் 15 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    வேக தடை அமைக்க கோரி உண்ணாவிரதம்

    எலச்சிபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே இருந்து சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட வேகத்தடைகளை உடனே போர்க்கால அடிப்படையில் அமைத்து தர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர் பின்னர் உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிட்டனர்.

    பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை வாலிபர் கைது

    கொல்லிமலை குண்டநாடு பகுதியை சேர்ந்தவர் அஜித் என்பவர் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அஜித்தை மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ராசிபுரம் சிறையில்
    அடைத்தனர்.

    அடுத்த நான்கு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

    நாமக்கல்லில் சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.
    இன்று முதல் 4 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறப்பதால் பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அர்த்தநாரீஸ்வரர் தேர்த்திருவிழா பணி தொடக்கம்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா வருடாவருடம் சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த ஆண்டு தேர் திருவிழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளதால் அதற்கான பணிகள் மற்றும் தேர் திருப்பணிகள் இன்று துவங்கியது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கலில் பல்வேறு பகுதிகளில் மழை-மக்கள் மகிழ்ச்சி

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் சாரல் மழை பெய்தது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இன்று குளிர்ச்சி சூழல் நிலவியது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கறிக்கோழி விலை உயர்வு!

    கறிக்கோழி விலை கிலோ ரூபாய் 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிலோவுக்கு ரூபாய் 3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கறிக்கோழி விலை கிலோ ரூபாய் 130 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ ரூபாய் 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல்!

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டூ திருச்செங்கோடு செல்லும் வழியில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் மாணவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.

    பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பலி!

    பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் நாமக்கல் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் சென்றபோது, முன்னால் தனியார் கல்லூரி பஸ் ஒன்று சென்றுள்ளது. ஓட்டுநர் இடதுபுறமாக பேருந்தை திரும்ப முயன்ற போது முருகேசன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி