Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் (11.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

நாமக்கல் மாவட்டத்தில் (11.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

நாமக்கல் மாவட்டத்தில் (11.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (11.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 11.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 11.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்.

    நுழைவுப் பால குண்டு குழி சாலையில் எட்டிப்பார்க்கும் ஆபத்தான கம்பிகள்!

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவிரி RS மேம்பாலம் நுழைவு பகுதியில் குண்டு குழிகள் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை மாற்றமில்லை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 05 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

    நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

    தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை

    பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆயிரத்து 742 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூபாய் 26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூபாய் 20-க்கும், சராசரியாக ரூபாய் 50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 348-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    நாமக்கலில் இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

    நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கி‌னாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் குளிர்ச்சி சூழல் நிலவியது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம்!

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையில் கூறிய பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் நான்கு பேர் படுகாயம்!

    குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் காவல் ஆய்வாளர் மகள்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்த மாணவி!

    ராசிபுரத்தில் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தேர்வுக்கு நேரமானதால் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கேட்டும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். மேலும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாததால் ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்து மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கண்டித்து மக்கள் பேருந்தை சிறைப்பிடித்தனர்.

    நகைக்கடை அதிபர்களுக்கு விழிப்புணர்வு

    சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கி,கனரா வங்கி, கூட்டுறவு வங்கி சேர்ந்த மேலாளர், செயலாளர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விளக்கமாக பேசப்பட்டது.

    அனைத்து வேளாண் துறைகள் பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அனைத்து வேளாண் துறைகள் பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.ஒவ்வொரு துறையின்‌ செயல்பாடுகள் மற்றும் அதில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் எந்த மாதிரியான பயிர் சாகுபடி செய்யலாம், எவ்வளவு லாபம் ஈட்ட முடியும், சாகுபடி செய்யும் பயிர்களை எவ்வாறு விற்கலாம் என விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி