Home /namakkal /

நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோவில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோவில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

நாமக்கல் மலைக்கோவில்

நாமக்கல் மலைக்கோவில்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் சில முக்கிய கோயில்களின் குறிப்புகள் மற்றும் எங்கே உள்ளது என்பதை குறித்து இப்பதிவில் காண்போம்.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் சில முக்கிய கோயில்களின் குறிப்புகள் எங்கே உள்ளன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

    அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் இருக்கிறது. சிவனும் பார்வதியும் ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கிறார்கள். அழகிய மலையின்மீது அமைந்துள்ள அற்புதமான திருக்கோயில் இது. அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிறந்து விளங்குகிறது. இக்கோயில் திருவிழா வைகாசி விசாக தேர்த் திருவிழாவாக வெகு விமரிசையாக நடைபெறும். மலைக்கோயில் திருச்செங்கோடு நகர பகுதியில் கம்பீரமாக எழுந்து மக்களுக்கு காட்சியளிக்கிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் நாமக்கலின் மையப் பகுதியிலே அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தனிச்சிறப்பு என்னவென்று கேட்டால் கோபுரம் கிடையாது. மேலும் 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயர் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதனால், ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசிக்க வருகை புரிவார்கள்.

    நரசிம்மர் கோவில்

    நாமக்கல் நகரப் பகுதியின் மையப் பகுதியில் நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் மற்றும் தாயார் நாமகிரித்தாயார் ஆவார். நாமக்கல் மலைக்கோட்டையின் அடிப்பகுதியில் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் எழுந்தருளியுள்ளார். நரசிம்மரை வணங்கியவாறு கோயிலுக்கு முன்னே ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக இருப்பதால் நாமக்கல் சுற்றுலா வருபவர்கள் நிச்சயமாக சென்றுவிட்டு வரலாம்.

    கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி கோயில்

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் உச்சியில் அரியூர்நாடு பகுதியில் உள்ள மாசிக்குன்றில் வாழம்புல் என்ற புல்லினால் அமைந்த சிறிய கூரைக்கட்டிடத்தில் வேங்கை வாகனத்தில் அமர்ந்து கம்பீரமாக மக்களுக்கு காட்சியளித்து வருகிறார் மாசி பெரியண்ணன் சாமி.  இவருக்கு சங்கிலி கருப்பு, நாட்டுமுனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் கூறுகின்றனர். மாசி பெரியசாமி பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சுயம்புவாய் தோன்றி
    நாளடைவில் பெரியசாமியாக அனைத்து மக்களும் வழிபட தொடங்கி உள்ளனர். இக்கோயிலுக்கு அமாவாசை நாட்களில் மட்டும் அதிக அளவில் மக்கள் செல்வார்கள்.

    காளிப்பட்டி கந்தசாமி கோயில்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில், மல்லசமுத்திரம் அருகே உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முருகன் பெருமான் சன்னதியில் கந்தசாமியாகவும், கோயில் முன்பு இராஜகணபதி, இடும்பன், சனீஸ்வரர், வேலாயுதசாமி என காட்சியளிக்கிறார்கள். கிருத்திகை, சஷ்டி, தைப் பூசம் என விசேஷ நாட்களில் இங்கு அதிக அளவில் மக்கள் வருகை புரிவார்கள். மேலும் கந்தசாமி கோயிலுக்கு வரும் மக்கள் காக்கும் கடவுளாக வழிபடுகின்றனர்.

    சின்ன ஓங்காளிம்மன் கோயில்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்ன ஓங்காளிம்மன் கோயில். இக்கோயில் 60 அடி மேல் கொண்ட மஹா குண்டம் கோயிலாக உள்ளது. இக்கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கு வந்து வேண்டுதல் வைத்து விட்டு சென்றால் நிச்சயமாக நிறைவேறும். தீராத பிரச்சனைகள் விரைவில் தீர்வு பெறும் காக்கும் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.

    கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோயில்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் கொக்கராயன்பேட்டை என்ற பகுதியில் அமைந்துள்ளது பூர்வ ஜென்ம பாவம் தீர்க்கும் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில். இக்கோயில் உலகத்தில் பிறந்த மனிதர்களுக்கு 'தான்' என்ற அகந்தை இருப்பது தவறு என்பதை வலியுறுத்தும் கோவிலாக அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் கோயில். இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால் அதிக அளவில் மக்கள் வருகை புரிவார்கள்.

    பரமத்தி வேலூர் கபிலர் மலை

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் வட்டத்தில் காவிரிக்கரையில் மலைக் கோயில் அமைந்துள்ளது. இம்மலையில் கபிலர் என்னும் மகரிஷி இருந்து வழிபட்டு உள்ளார். மேலும் கபிலை என்னும் பசு இருந்து உள்ளது. இதனால் சங்க இலக்கியப் புலவரான கபிலருக்கு வழங்கப்பட்ட மலை என்பதால் கபிலர் மலை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இம்மலையில் முருகக் கடவுள், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியராகவும் எழுந்தருளி காட்சி தருகிறார். பழைமை வாய்ந்த மலைக் கோயில் என்பதால் ஏராளமான மக்கள் வருகை புரிவார்கள்.

    ராசிபுரம் கைலாசநாதர் கோயில்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்தபோது அவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. இக்கோயிலில் சிவராத்திரி அன்று ஆறு கால பூஜைகள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த கோயிலாக உள்ளது.

    இதுபோன்ற பல்வேறு பழைமை வாய்ந்த கோயில்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கின்றன. தற்போது ஒரு சில கோயில்கள் பற்றிய சிறிய குறிப்புகள் மட்டும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி