முகப்பு /நாமக்கல் /

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா..

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா..

X
திருச்செங்கோடு

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Namakkal News | திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் புகழ்பெற்ற மாசி குண்டம் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி பூச்சாற்றுகளுடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் குண்டம் திருவிழாவை ஒட்டி குண்டம் இறங்க காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட மாசி குட்டம் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து ஓங்காளியம்மனை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் புகழ்பெற்ற மாசி குண்டம் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி பூச்சாற்றுகளுடன் தொடங்கியது. குண்டமிறங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் காப்பு கட்டிய அனைத்து பக்தர்களும் தீர்த்த குடம் அக்னிக்கரகம் அழகு கூத்துகள் ஆகிய நேர்த்திகடன் நிகழ்வுகளும் நடைபெற்று முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மதியம் முதல் வரிசையில் நின்று வந்தனர். பின்னர் பூசாரி கும்பம் எடுத்து மாசி பூ குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து வரிசையில் காத்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், காவலர்கள் என அனைவரும் மாசி பூ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய சின்ன ஓங்காளியம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு அதிக கூட்டம் இருப்பதால் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. குண்டம் இறங்கும் பூக்குளி அருகே தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Local News, Namakkal