நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் 220 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் முதல்வரின் தனிப்பிரிவு, போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் புகார்தாரர் மற்றும் எதிர்புகார்தாரர் ஆகிய இருவரையும் அழைத்து சமரசம் செய்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது.
அந்தவகையில், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் 19-ம் தேதி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த மனுக்களை வாங்கினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அப்போது அவர் கூறுகையில், “இன்று நடைபெற்ற இம்முகாமில் இன்று 220 மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. காலையில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் மாலையில் நாமக்கல், ராசிபுரம் என 4 உட்கோட்டத்திற்கு உட்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டது” என அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal