நாமக்கல்லில் ரூ.50,000 சம்பளத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள பணி இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல காலிப்பணியிடங்களும் தொடர்ந்து நிரப்பட்டு வருகின்றன. தேர்வுகள் மூலமாகவும் நேரடியாகவும் இத்தகைய காலிப்பணியிடங்கள் நிரப்படுகின்றன.
இந்நிலையில், நாமக்கல் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தில், காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு வரும் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை www.skilltraing.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் டவுண்லோடு செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘முதல்வர், அரசினர் தொழில்பயிற்ச நிலையம், தட்டாங்குட்டை, கீரம்பூர் நாமக்கல் – 637207’ என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் அனுப்பி வைக்கும் விண்ணப்பங்கள், முறையான கல்வி சான்றிதழ்கள் இல்லாதவை நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர், மாத சம்பளம் : Level 1 (Rs.15700 to Rs. 50,000)
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு எதும் தெரிவிக்கவில்லை.
Must Read : நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?
மாற்றுத் திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு கூடுதலாக 10 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13,404 காலிப்பணியிடங்கள்: கேந்திர வித்யாலயாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Local News, Namakkal