Home /namakkal /

ரத்த சோகை விழிப்புணர்வு; நாமக்கல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை நலப் பெட்டகம்

ரத்த சோகை விழிப்புணர்வு; நாமக்கல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை நலப் பெட்டகம்

பள்ளி மாணவிக்கு இயற்கை நலப் பெட்டகம்

பள்ளி மாணவிக்கு இயற்கை நலப் பெட்டகம்

நாமக்கல் மாவட்டம் கோழிக்கால் நத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு ரத்த சோகை தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் கோழிக்கால் நத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு ரத்த சோகை தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ரத்தசோகை என்பது உடலில் உள்ள ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகையாக கருதப்படுகிறது. மேலும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ரத்தசோகை ஏற்படும். ஆனால் பெண்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவத்தின் போது பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்க நேரிடும். இதனால் பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் அவசியம் உள்ளது.

    மேலும் ரத்த சோகை அறிகுறிகளாக சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, பசியின்மை, எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபட முடியாதது, மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, விரல் நகம் மேடாக இல்லாமல் தட்டையாக காட்சியளிப்பது போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடம் ரத்தசோகை இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நலப் பெட்டகம் பெறும் மாணவி


    ரத்தசோகை இருந்தால் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும். இதனை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் மருத்துவர் வெங்கடேசன் உணவு ஆலோசனை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சத்தான உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    மாணவிகளுக்கு விழிப்புணர்வு


    அதுமட்டுமின்றி, மாணவிகளுக்கு கறிவேப்பிலை பொடி, முருங்கை இலை பொடி, நெல்லிக்காய் பொடி, தேன் அடங்கிய இயற்கை நல பெட்டகம் வழங்கப்பட்டது.

    மாணவிகளுக்கு விழிப்புணர்வு


    மேலும், இயற்கை நல பெட்டகத்தில் இரும்பு சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை பொடி, முருங்கை இலை பொடி, நெல்லிக்காய் பொடி, தேன் நான்கு பொருட்கள் உள்ளது. இவற்றை நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளை உணவுக்கு பின்னர் 5 கிராம் அளவில் பால் அல்லது தேன், தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் 10 முதல் 19 வயது உள்ள வளர் இளம் பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க முடியும்.

    சரியான முறையில் உணவுகளை உட்கொண்டு, உடலுக்கு தேவையான புரதச் சத்து மற்றும் இரும்பு சத்து இருக்கும் உணவுகளை எடுத்து கொண்டு வந்தால் ரத்தசோகை வராமல் தடுக்க முடியும். மேலும் இதிலிருந்து எளிய முறையில் வெளியே வர முடியும் என்று தெரிவித்தார். இயற்கை நல பெட்டகம் பெற வேண்டும் என்று நினைத்தால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் நாள்தோறும் பெற்றுக் கொள்ளலாம்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி