ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் கச்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

நாமக்கல் கச்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து - பொருட்கள் எரிந்து நாசம்

கச்சாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம்!

கச்சாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம்!

Namakkal Fire Incident In The Kachalai Godown | நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கச்சாலை குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் சேதமானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கச்சாலை குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

பள்ளிபாளையத்தில் உள்ள பெரும்பாறை பகுதியில் சேகர் என்பவர் கச்சாலை குடோன் வைத்திருக்கிறார். இங்கு விசைத்தறி கூடங்களில் இருந்து பெறப்படும் பழைய பஞ்சு, நூல், ஆயில் பாட்டில்கள், இரும்பு பொருட்கள் வாங்கி மறு விற்பனை செய்யப்படுகிறது. குடோனில் ஒரு பகுதியில் சமயலறையும் உள்ளது.

இந்நிலையில், வேட்டி நூல்கள், பஞ்சு இருக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றி உள்ளது. சிறிது நேரத்தில் தீ அங்கிருந்து பொருட்கள் மீது பரவி குடோன் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது. மேலும் சமயலறை இருந்த சிலிண்டர்கள் வெடித்தது. இதனால் மேலும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ அதிக அளவில் எரிந்ததால் அந்த பகுதியில் சென்ற மின்கம்பிகளும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் குடோனில் வேலை செய்தவர்கள் உடனடியாக வெப்படை, திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து குடோனில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதி மக்களும் வாளிகள் மூலம் தண்ணீர் எடுத்து தீயை அணைக்க உதவினர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக காணப்பட்டது.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பீரோ, கட்டில், பாட்டில்கள், நூல், பழைய இரும்பு பொருட்கள் எனகுடோனில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கச்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் ; மதன்குமார்.s

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal