முகப்பு /நாமக்கல் /

கல்வி உதவித்தொகை பெற எளிமையான வழிமுறைகள் - நாமக்கல் ஆட்சியர் தகவல்

கல்வி உதவித்தொகை பெற எளிமையான வழிமுறைகள் - நாமக்கல் ஆட்சியர் தகவல்

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில், 2022–23ம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெறுவது குறித்து நாமக்கல் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: -

நாமக்கல் மாவட்டத்தில், 2022–23ம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெறும் வகையில், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், இதுவரை ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதாவது அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவ, மாணவிகள் தங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தி, கைவிரல் ரேகை பதிவு செய்து, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கலாம். அந்த கணக்கு எண் மூலம் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal