முகப்பு /செய்தி /நாமக்கல் / 1000 கிலோ எடை... 24 அடி உயரம்.. கிரேனில் நடப்பட்ட பிரம்மாண்ட கருப்பசாமி அருவா

1000 கிலோ எடை... 24 அடி உயரம்.. கிரேனில் நடப்பட்ட பிரம்மாண்ட கருப்பசாமி அருவா

கிரேனில் நடப்பட்ட பிரம்மாண்ட கருப்பசாமி அருவா

கிரேனில் நடப்பட்ட பிரம்மாண்ட கருப்பசாமி அருவா

ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்புசாமி கோவில்  21 அடி உயரம் கொண்ட 2 டன் பிரமாண்டமான இரண்டு அருவாள் பூஜைகள் செய்து கிரேன் உதவியுடன் நடப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஒரே இரவில் மட்டும், ஆயிரக்கணக்கான ஆட்டுகிடாக்கள் வெட்டப்படுவது வழக்கம். இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டு விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

இக்கோவிலுக்கு பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராஜா, அவரின் மனைவி சாந்தி ஆகியோர் 16 அடி உயர 2 டன் பிரமாண்ட இரும்பிலான அருவாள் மற்றும் கை வடிவிலான 5 அடி கொண்ட கிரனைட் பீடம் என மொத்த 21 அடி கொண்ட 2 பிரமாண்ட அருவாளை காணிக்கையாக வழங்கினர். இதனை கிரேன் உதவியுடன் கோவிலின் முன் பகுதியில் பூஜைகள் செய்து நடப்பட்டது.

First published:

Tags: Facebook Videos, Namakkal