Home /namakkal /

விநாயகர், முருகன், கருப்பனார் கோயில் கும்பாபிஷேகம் விழா!

விநாயகர், முருகன், கருப்பனார் கோயில் கும்பாபிஷேகம் விழா!

விநாயகர்,

விநாயகர், முருகன்,கருப்பனார் கோயில் கும்பாபிஷேகம் விழா- திரளான பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம் சீத்தாராம்பாளையம் என்ற ஊரில் எழுந்தருளி உள்ள விநாயகர், பாலமுருகன், கருப்பனார் திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழா மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் சீத்தாராம்பாளையம் என்ற ஊரில் எழுந்தருளி உள்ள விநாயகர், பாலமுருகன், கருப்பனார் திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழா மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

    சீத்தாராம் பாளையம் அருகே கணபதி நகரில் இம்மூன்று கோயில்கள் இங்குள்ளவர்களுக்கு முக்கிய ஒன்றாக இருக்கிறது. தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டு, கோயில் முழுவதும் புதிய வண்ணப் பூச்சுகள் பூசப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. கோயில் சேர்ந்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் என ஒன்றாக சேர்ந்து மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோபுர சிற்பங்களுக்கு கண் திறப்பு செய்யப்பட்டு அதன் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. அதன்பின் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் குடம் எடுத்தல், முளைப்பாரி அழைத்தல், விசேஷ பூஜைகள் என நடந்தது. அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நான்காம் கால யாக பூஜைகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

    அதன்பின் யாக சாலை பூஜைகள் நடைப்பெற்று மங்கள இசை முழங்க கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உள்ளுர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுரம் மற்றும் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். விழாவில் பங்கேற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி