முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் புத்தக திருவிழாவில் துப்பாக்கி கண்காட்சி.. பிரமிப்புடன் பார்வையிட்ட பொதுமக்கள்

நாமக்கல் புத்தக திருவிழாவில் துப்பாக்கி கண்காட்சி.. பிரமிப்புடன் பார்வையிட்ட பொதுமக்கள்

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்த ஆயுத அரங்கு

Namakkal News | நாமக்கல்லில் முதல் முறையாக புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அதில் வித்தியாசமாக ஒரு அரங்கில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் முதல் முறையாக புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. அதில் வித்தியாசமாக ஒரு அரங்கில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஸ்டாப் கிளப்பில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிஸ்டல்கள், துப்பாக்கிகள், லாஞ்சர் மற்றும் கப்பல்கள், நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீன கால ஆயுதங்கள் வரையிலும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து ஆயுதங்களை முதன் முறையாக ஆர்வத்துடன் பார்வையிட்டு அவைகளுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஆயுதங்களின் திறன், செயல்பாடு குறித்து போலீசாரிடம் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அரங்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் மாணவ, மாணவிகள் நவீன ஆயுதங்கள் குறித்த சந்தேகங்களையும் போலீசாரிடம் கேட்டறிந்தனர்.

First published:

Tags: Local News, Namakkal