வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மொட்டை மாடியில் எளிதாக உற்பத்தி செய்ய தோட்டக்கலைத் துறை சார்பில் மாடி தோட்டம் அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பொதுமக்கள் வீட்டு மொட்டை மாடியில் இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் வகையிலும், மாடி தோட்டம் அமைப்பதை ஊக்கப்படுத்தும் வகையிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சி, வட்டாரத் தோட்டக்கலை துறை மற்றும் எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கம், வாசவி வனிதா கிளப் ஆகியவை இணைந்து இப்பயிற்சி முகாமினை நடத்தின.
பயிற்சி முகாம் துவக்க விழாவில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் தலைமை வகித்து துவக்கி வைத்துப் பேசினார். இதில் பேசிய அவர், பெண்கள் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இயற்கை முறையில், காய்கறிகளை உற்பத்தி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து பயிரிட்டு ஆரோக்கியமான எதிர்கால சமுதாயத்தை பெண்கள் உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க : கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
முகாமில் செயல்முறை பயிற்சி அளித்த ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் எம்.யோகநாயகி, மாடி தோட்டம் அமைக்கும் முறைகள், காய்கறி, பழச் செடி விதைகள், ரசாயன கலப்பற்ற இயற்கை உரங்கள், பராமரிப்பு முறைகள், வேப்பம் புண்ணாக்கு மகத்துவம், இயற்கை பூச்சி மருந்து போன்றவை குறித்து பெண்களுக்கு பயிற்சியளித்தார்.
மேலும், மூலிகை செடிகளான கற்றாழை, துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை, அஸ்வகந்தா, பிரண்டை போன்றவை பயிரிடும் முறைகள், அவசியம், பயன்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் மாடி தோட்டம் அமைப்பதற்கான தென்னை நார்க் கழிவுகள், விதை தொகுப்பு, வளர்ப்பு பைகள் போன்றவை 10 பெண்களுக்கு மானியவிலையில் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனைத்தொடர்ந்து மாடி தோட்டம் பராமரிக்கும் பெண்களின் வீடுகளுக்கு சென்று தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் மாவட்டத் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கே.கணேசன், எஜூகேஷனல் ரோட்டரி, வாசவி வனிதா கிளப், இன்னர்வீல் கிளப், தன்னார்வல குழு நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal