முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள்.. ஏராளமானோர் பங்கேற்பு..

நாமக்கல்லில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்கள்.. ஏராளமானோர் பங்கேற்பு..

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

Free Medical Camp : நாமக்கல்லில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் யுனைடெட் வெல்பர் டிரஸ்ட், நாமக்கல் ரோட்டரி சங்கம் மற்றும் கிட்னி டயாலிசிஸ் சென்டர் இணைந்து நடத்தும் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், ரோட்டரி கிளப் ஆப் நாமக்கல் தலைவர் ஆர்.விஸ்வநாதன், செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள்

பொருளாளர் மணிவேல் மற்றும் உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இவர்களுடன் நாமக்கல் வாக்கர்ஸ் கிளப் தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் ராஜு மற்றும் துணை தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் உமா சங்கர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சென்ட்ரல் காலில் ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

First published:

Tags: Local News, Namakkal