Home /namakkal /

வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தும் தேவனாங்குறிச்சி 'அமுத வேர்கள்' அமைப்பினர்..

வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தும் தேவனாங்குறிச்சி 'அமுத வேர்கள்' அமைப்பினர்..

நாமக்கல் - இலவச மருத்துவ முகாம்

நாமக்கல் - இலவச மருத்துவ முகாம்

Namakkal District | நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இலவசமாக ஹோமியோபதி சிகிச்சை அளிக்கும் வகையில் வாரந்தோறும்  'அமுத வேர்கள்' என்ற தன்னார்வ அமைப்பினர் மக்களுக்கு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே  உள்ளது தேவனாங்குறிச்சி. இங்கு  'அமுத வேர்கள்' என்ற தன்னார்வ அமைப்பினர் பல்வேறு சமுக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

    இந்த அமைப்பினர் தாங்கள் சார்ந்த பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு இலவச மருத்துவத்தை கொண்டு சேர்க்கும் வகையில் வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு இதுவரை 35க்கும் மேற்பட்ட வாரங்கள்  தொடர்ச்சியாக மருத்துவ முகாமை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த இலவச முகாம் மூலம் 1,200க்கு மேற்பட்டோர் பயன் அடைந்து உள்ளதாக கூறுகின்றனர்.

    பிரதி செவ்வாய் முகாம் நடைபெறுகிறது..

    தொடர்ந்து அமுத வேர்கள் அமைப்பினர் கூறுகையில்,  “ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று எக்ஸல் ஹோமியோபதி கல்லூரியுடன் சேர்ந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது அமைப்பு பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் ஊர் மக்கள் பயன்பெற இது போன்ற அடிப்படை உதவிகளை முன்னெடுத்து பல வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.

    இலவச மருத்துவ முகாம்


    மேலும் ஆங்கில மருத்துவத்திற்கு ஓர் மாற்றாக எந்தவொரு பின்விளைவுகளும் இன்றி இருப்பது ஹோமியோபதி. இதன் மூலம் உடலில் உள்ள பல பிரச்னைகளை குணப்படுத்த முடியும். மக்கள் இலவசமாக எளிதில் பயன்பெற முடியும். ஆங்கில  மருத்துவத்தின் மூலம் அதிகமாக செலவு செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்களுக்காகவே ஹோமியோபதி மருத்துவத்தை கொண்டு வந்து அதன் மூலம் பயன்பெற வழி செய்து இருக்கிறோம்.

    மக்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இலவச முகாமை நடத்தி வருகிறோம். ஹோமியோபதி மருத்துவத்தின் பலனை உடனடியா பெற முடியாது.சிறுது காலம் மருத்துவத்தை பின்பற்றினால் அதன் பலனை நிச்சயம் அனுபவிக்க முடியும். மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் இம்முகாமில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் உடலில் உள்ள பிரச்னைகளை இலவசமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    'அமுத வேர்கள்' அமைப்பினரிடம் சமூக சேவை குறித்து பேச நினைத்தால் இந்த எண்களை 918344854588, 919092024087, 917010079962 தொடர்பு கொள்ளலாம்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி