மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம், 10,880 MTS (Multi-Tasking Staff) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான பணி காலியிடம் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்தல் https://ssc.nic.in/ என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும். கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் இத்தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், வெப்சைட்டில், அனைத்து போட்டித்தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் டவுன் லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!
அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை. காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, இதனை போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Competitive Exams, Local News, Namakkal