ஹோம் /நாமக்கல் /

குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளநீர்.. முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்கள்..

குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளநீர்.. முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்கள்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்

Floods in Namakkal | நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நாட்டகவுண்டம்புதுார், ஜனதாநகர், ஆவாரங்காடு என பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன. ஆற்றோரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal | Namakkal

  நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆற்றின் கரையோர  பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியது, இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்றாவது முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  குறிப்பாக கரையோர பகுதியான குமாரபாளையத்தில் உள்ள இந்திராநகர், மணிமேகலை வீதி, அண்ணாநகர், பழையபாலம், புத்தர் தெரு, கலைமகள் தெரு உடை உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

  வெள்ளப்பெருக்கால் ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் கரைபுரண்டு செல்வதால் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழையபாலத்தில் வாகனங்கள் செல்ல தடையும் செய்யப்பட்டுள்ளது.

  இதேபோல் பள்ளிபாளையம் பகுதியில் நாட்டகவுண்டம்புதுார், ஜனதாநகர், ஆவாரங்காடு, பாவடிதெரு, சந்தைபேட்டை, சத்யாநகர், குமரன் நகர் மற்றும் பல பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன. ஆற்றோரத்தில் உள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசித்த, 30 மக்கள் தங்களுடைய உடைகளுடன் சந்தைபேட்டை, ஆவாரங்காடு, நாட்டகவுண்டம்புதுார் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  மேலும் முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: மதன், நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Local News, Namakkal