Home /namakkal /

குமாரபாளையத்தில் எலக்ட்ரிக் கடையில் பெரும் தீ விபத்து- லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

குமாரபாளையத்தில் எலக்ட்ரிக் கடையில் பெரும் தீ விபத்து- லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

தீ விபத்து

தீ விபத்து

குமாரப்பாளையத்தில் எலக்ட்ரிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்து.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் இயங்கி வரும் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலுள்ள படைவீடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அப்பகுதியில் சொந்தமாக எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடை ஒன்றை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளார். கடையில் எலக்ட்ரிக் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் அதிக அளவில் இருந்துள்ளது.

    தீ விபத்து


     

    இதனிடையே, மாலையில் கடையில் இருந்த லைட்டை ஆன் செய்யும் போது திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பரவ தொடங்கியுள்ளது. இதனால் கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நெருப்பை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் கடையில் இருந்த எலக்ட்ரிக் பொருட்களால் கடை முழுவதும் தீ வேகமாக பரவியது.

    தீ விபத்தைப் பார்க்கும் மக்கள்


    இதனையடுத்து சங்ககிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் கூடுதலாக வெப்படை மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்து வரவழைக்கப்பட்டனர். அதன் பின் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    புகை மண்டலமாக காட்சியளிக்கும் பகுதி


    மேலும் தீயானது அதிக அளவில் கடை முழுவதும் பரவியதால் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தால் அப்பகுதி சில மணி நேரத்துக்கு புகை மண்டலமாக இருந்தது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன்- நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி