ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்து படித்தோருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்து படித்தோருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.!

வேளாண்மை படிப்புகள்

வேளாண்மை படிப்புகள்

Namakkal District | வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தொழில் துவங்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தொழில் துவங்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் எடுத்து கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் 2022-23ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கபடவுள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம் - கொலு வைத்து வழிபாடு..!

இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தபட உள்ளது.

திட்டமானது பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் உற்பத்தியை பெருக்க வேளாண் பட்டதாரிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : நாமக்கல் மாவட்டத்தில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்..!

மேலும் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பழங்களை நியாமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலையில்லா வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள், சிறந்த கணினி புலமையும் வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் விரிவான செயல்திட்ட அறிக்கையுடன் விண்ணப்பத்தினை சம்பந்தபட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal