ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்..!

நாமக்கல் மாவட்டத்தில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்..!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியது. அதுமட்டுமின்றி விளைநிலங்களில் உள்ள கிணறுகளில் போதிய தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வபோது மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஊர் பகுதியில் செல்லும் வாய்க்கால்களில் அதிக அளவு நீர் சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்து படித்தோருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி.!

மேலும் விவசாய செய்யவும், நெல் சாகுபடி செய்யவும் சரியான காலகட்டம் என்பதால் விவசாயிகள் அதிக மகசூல் தரும் பயிர்களை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த வாரத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசனம் மற்றும் பெய்து வரும் பருவ மழையைப் பயன்படுத்தி நிலத்தை உழுது நெற்பயிர்கள் நடவு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர தொடங்கி உள்ளது. மேலும் இதன் அறுவடை டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடைபெறும். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: மதன்குமார்.S

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal