Home /namakkal /

பரமத்தி வேலூர் வாரச் சந்தையில் அதிக விலைக்கு ஏலம் போன வாழைத்தார்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் வாரச் சந்தையில் அதிக விலைக்கு ஏலம் போன வாழைத்தார்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பரமத்தி வேலூர் வாரச் சந்தையில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக 600 ரூபாய்க்கு ஏலம் போனது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாரச்சந்தையில் வாழைத்தார் அதிகபட்சமாக 600 ரூபாய் வரை விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாரச்சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நேரடியாக கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில், பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும்,
    பச்சைநாடன் வாழைத்தாா் அதிகபட்சமாக 300-ரூபாய்க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் 500-ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 800 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்மாக ரூ. 450-க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் அதிகபட்மாக ரூ. 350-க்கும், பச்சைநாடன் வாழைத்தாா் அதிகபட்மாக ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 400-க்கும் விற்பனையாகின.
    மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு ஏலம் போனது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வாழைத்தாா்களின் வரத்து அதிகரித்திருந்தாலும், விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி