Home /namakkal /

நாமக்கலில் குறைந்த விலைக்கு விற்கப்படும் தக்காளி; விவசாயிகள் வேதனை

நாமக்கலில் குறைந்த விலைக்கு விற்கப்படும் தக்காளி; விவசாயிகள் வேதனை

சந்தையில் தக்காளி

சந்தையில் தக்காளி

நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்லில் உள்ள மலைக் கோட்டை சாலை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் உழவர் சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.

    தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உழவர் சந்தையில் கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்க்கப்படுகிறது. கடந்த மாதத்தைப் பொறுத்தவரை தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கப் பெற்றது.

    இந்த நிலையில், ஆடி மாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும். இதனால் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் தற்போது எதிர்பார்த்ததை விட குறைவான விலைக்கு விற்கப்படுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    மேலும் தக்காளியை தினசரி விற்பனைக்குக் கொண்டு செல்லும் செலவிற்கு கூட போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சில நாட்களில் தக்காளி விற்பனையாகாமல் சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர்: மதன்- நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி