முகப்பு /நாமக்கல் /

அதுக்கும் மேல.. பிறந்தநாளுக்காக நாமக்கல்லில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் செய்த செயலை பாருங்க..!

அதுக்கும் மேல.. பிறந்தநாளுக்காக நாமக்கல்லில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் செய்த செயலை பாருங்க..!

X
விக்ரம்

விக்ரம் பிறந்தநாள்

Actor Vikram Birthday : சீயான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விக்ரமின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் - 17 ) கொண்டாடப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு என எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய நடிகர் என்றவுடன் ரசிகர்களின் நினைவுக்கு வரும் பெயர்களில் முக்கியமான ஒன்று விக்ரம். 1990ம் ஆண்டு டி.எல்.ஜோய் இயக்கத்தில் வெளியான 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் விக்ரம். அதன் பிறகு முன்னணி இயக்குநரான எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’ படத்தில் நடித்தார்.

அடுத்ததாகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ படத்தில் நடித்தார்.  அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், எந்த படங்களும் விக்ரமுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை. தோல்வி நாயகனாகவே திரையுலகில் அறியப்பட்டார்.

விக்ரம் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

இதையும் படிங்க : சம்பவம் இருக்கு..! மிரட்டும் தங்கலான் மேக்கிங் வீடியோ.. விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெற்றிக்காக போராடிய நடிகர் விக்ரமிற்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகே சேது படத்தின் மூலம் வெற்றி கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் அவரின் வளர்ச்சி அபிரிமிதமானது. யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை அவர் தமிழ் சினிமாவில் அடைந்து விட்டார் எனலாம்.

விக்ரமின் பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் மிகவும் சிறப்புடன் கொண்டாடி வரும் சூழலில் நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் விக்ரம் ரசிகர் மன்றம் சார்பாக, வேலகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோருடன் அவரின் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பிறந்தநாள் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டமாகவே இருந்துவிடாமல் ஏழை எளியோருக்கு பயனுள்ள வகையில் கொண்டாட்டத்தை மாற்றிய விக்ரம் ரசிகர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Local News, Namakkal