ஹோம் /Namakkal /

Namakkal : பேன்ஸி டிரெஸ்சில் வந்து தெறிக்க விட்ட மாணவர்கள்.. கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப்பள்ளியின் செம பிளான்.

Namakkal : பேன்ஸி டிரெஸ்சில் வந்து தெறிக்க விட்ட மாணவர்கள்.. கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப்பள்ளியின் செம பிளான்.

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District : நாமக்கல் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பாளையம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி இடைநிற்றலை தவிர்க்க பேன்ஸி டிரஸ் போட்டி மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர் அப்பள்ளியின் ஆசிரியர்கள்.. அது குறித்த ஒரு காணொளி..

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.  புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து ஊக்குவிக்கும் வகையிலும், கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகவும்  பேன்ஸி டிரஸ் போட்டி வைத்து  அசத்திய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. விவசாயிகள், மருத்துவர்கள், காவலர்கள் போன்று வேடம் அணிந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  நாமக்கல் மாவட்டம் தண்ணீர் பந்தல் பாளையம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய ஆரம்பித்துள்ளார்கள். புதிதாக சேரும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களை பள்ளிப்படிப்பை புத்துணர்ச்சி உடன் தொடங்கும் வகையில் வித்தியாசமான துணிகள் அணிந்தும், தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறை, வக்கீல் போன்ற வேடங்கள் அணிந்து அவர்கள் போலவே நடத்தி காட்டினார்கள்.

  இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், "எங்கள் பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பள்ளிப்படிப்பின் போது எந்தவொரு பயம் இல்லாமல் வெற்றிகரமாக முடித்து வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல செயல்கள் அவ்வபோது செய்து வருகிறோம். ஏனென்றால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வருவதற்கு ஆர்வமாகவும் இருக்கும். தற்போது பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்கள் வரத் தொடங்கி உள்ளனர்.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால் மாணவர்களின் மனதில் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் மேலும் பள்ளிப்படிப்பை முழுமையாக தொடர வேண்டும் என்பதற்காக பேன்ஸி டிரஸ் (Fancy Dress) போட்டி ஒன்றை வைத்து, அதில் மாணவர்களை வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து உற்சாகப்படுத்தினர். அதுமட்டுமின்றி காவலர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் என வித்தியாசமான வேடங்களிலும் வந்து அசத்தினார்கள்.

  எங்களது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் எங்களுடன் சேர்ந்து மிகவும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மற்ற அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற மாணவர்கள் உற்சாகப்படுத்தும் வகையில் செய்தால் சேர்க்கையும் அதிகமாக இருக்கும், மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவார்கள் என்று தெரிவித்தார்.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal