Home /namakkal /

Namakkal News : ஈரோடு - சங்ககிரி சாலையில் பயணம் போறீங்களா? கொஞ்சம் கவனம்...

Namakkal News : ஈரோடு - சங்ககிரி சாலையில் பயணம் போறீங்களா? கொஞ்சம் கவனம்...

நாமக்கல்

நாமக்கல்

Namakkal Latest News : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஈகாட்டூர், வெப்படை, அம்மன் கோயில் வழியாக செல்லும் முக்கிய சாலையாக விளங்கும் இச்சாலை விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான சாலையாக உள்ளதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.. (படங்கள்: மதன், நாமக்கல்)

மேலும் படிக்கவும் ...
    ஈரோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் இல்லாமல் உள்ளதால் அதிக விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகள் நிகழ காரணமாகவும் மாறியுள்ளது.


    ஈரோட்டிலிருந்து ஓமலூர், சங்ககிரி மற்றும் சேலம் செல்வதற்கு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஈகாட்டூர், வெப்படை, அம்மன் கோயில் வழியாக செல்லும் முக்கிய சாலையாக விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் பள்ளி கல்லூரி பேருந்துகள் என செல்கின்றன.


    இதிலும் பல தனியார் பேருந்துகள் நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு சென்று வருகின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பாதசாரிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


    இவ்வழியாக செல்லும் போது வழியில் பல ஊர்கள் உள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் அதிக அளவில் மக்கள் கடந்து செல்கின்றனர். மேலும் அதிக அளவு மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் நால்ரோடு போன்று இருக்கும் இடங்களில் எந்தவொரு பாதுகாப்பு தடுப்பு‌ மற்றும் பேரிகார்டுகள் இல்லாததால் எதிரே வேகமாக வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


    அத்துடன் அருகாமையில் பள்ளிகள் இருக்கும் சூழலில்  அப்பகுதியிலும் பேரிகார்டுகள் மற்றும் சென்டர் மீடியனும் மிகுந்த இடைவெளியுடன் இருப்பதால் விபத்துகள் நிகழக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


    இதனால்  அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கிறது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிபாளையம் டூ வெப்படை வரையிலான சாலை மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது என்று சுற்றுப்புறத்தினர் கூறுகிறார்கள். ஆகையால் அதிக அளவில் மக்கள் சாலையை கடக்கும் பகுதிகளில் தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் வைத்து விபத்து ஏற்படாதவாறு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


     
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி