Home /namakkal /

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 5,000 கிமீ பைக்கில் விழிப்புணர்வு பயணம் - அசத்தும் இயற்கை ஆர்வலர்கள்..

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 5,000 கிமீ பைக்கில் விழிப்புணர்வு பயணம் - அசத்தும் இயற்கை ஆர்வலர்கள்..

விழிப்புணர்வு பயணம்

விழிப்புணர்வு பயணம்

Namakkal District: மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு பயணத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மதன் இவருடைய 6 வயது மகன் மித்ரன் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் ஆகியோர் மேற்கொள்கின்றனர். இவர்கள் 5,000 கிமீ பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    அழிந்து வரும் மரங்களையும், அழிக்கப்பட்டு வரும் மரங்களை பாதுகாக்கவும், மரக்கன்றுகளை நடுவதை  வலியுறுத்தி நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுமார் 5,000 கிலோமீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    இவர்கள் தங்களுடைய பயணித்தை  கோவையில் தொடங்கி நாமக்கல் வந்தடைந்தனர். இந்த விழிப்புணர்வு பயணத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மதன் இவருடைய 6 வயது மகன் மித்ரன் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் ஆகியோர் மேற்கொள்கின்றனர். மேலும் கோவையில் இருந்து நாமக்கல் வந்த இவர்களை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் பேசியதாவது, “கடந்த 10 வருடங்களுக்கு மேல் இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் செய்துக்கொண்டு வருகிறோம். இந்த முறை மரங்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் அழிக்கக் கூடாது, மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம்” என்றார்.

    கோவையில் தொடங்கி கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக ஹிமாசலப் பிரதேசத்தை சென்றடைந்து, பின்பு குஜராத், கர்நாடகா, கேரளம் வழியாக கன்னியாகுமரி வந்தடைய இருக்கிறார்கள். இதனிடையே பயணம் செல்லும் வழியில் விதைப்பந்துகளை சாலைகளிலும், இதர பகுதிகளிலும் தூவ இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி