நாமக்கல் மாவட்டத்தில், எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் குழந்தைகளின் கற்றல் நிலைகளையும் ஆசிரியர்களுடன் ஏற்பட்டுள்ள இணக்கத்தையும் பெற்றோர்களிடம் கொண்டு செல்லும் விதமாக எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற திட்டத்திற்கான பரப்புரை வாகனம் இயக்கப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில், உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன் மற்றும் குமார் ஆகியோர் முன்னிலையில். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அவர்கள் கொடியை அசைத்து இதனை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி முன்னின்று செய்தார்.
எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனம் தயார் செய்யப்பட்ட இந்த வாகனத்தில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், TNE FELLOWSHIP மற்றும் கலை குழு கலைஞர்கள் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிகழ்வானது நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை மற்றும் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஆகிய 2 இடங்களில் நடைபெறுகிறது. இந்த வாகனம் நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொண்டு நாளை (21.03.2023) அன்று மீண்டும் நாமக்கல்லை வந்தடையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal