ஹோம் /நாமக்கல் /

ரூ.16,557 மாத சம்பளம்... நாமக்கல்லில் வரும் 14ஆம் தேதி பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ..

ரூ.16,557 மாத சம்பளம்... நாமக்கல்லில் வரும் 14ஆம் தேதி பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ..

Jobs in Namakkal | நாமக்கல் வரும் 14ஆம் தேதி வெள்ளிக் pகிழமை பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

    நாமக்கல் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 14ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியார் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 2020, 2021 மற்றும் 2022ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்பவர்கள் 145 செ.மீ உயரம், அதிகப்பட்சம் 65 கிலோ எடை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    தேர்வு செய்யப்படும் ஆட்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ரூ.16,557 மாதச் சம்பளம், தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடவசதி  முகாம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Job, Namakkal