முகப்பு /நாமக்கல் /

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம்..

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம்..

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் நடந்த மாரத்தான் போட்டி

Namakkal News | நாமக்கல்லில் தண்ணீர் மேலாண்மை மற்றும் சிலம்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நாமக்கல்லில் நடத்தப்பட்டது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த மாரத்தானில் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது, 5 கி.மீ வரை சென்று, கொண்டிசெட்டிபட்டி பூங்காவில் நிறைவுபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal