ஹோம் /நாமக்கல் /

Namakkal | எல்லை முனியப்பன் கோவில் திருவிழா- நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

Namakkal | எல்லை முனியப்பன் கோவில் திருவிழா- நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

நாமக்கல் அம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் அம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் எல்லை முனியப்பன் கோவிலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லை முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. அதன் பின் கோழி, சேவல், கிடா வெட்டுதல், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றது‌.

  நாமக்கல் மாவட்டம் பாப்பம் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த எல்லை முனியப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் இவ்வூரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ளதால் இங்குள்ள மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இதனால் இக்கோயிலுக்கு வந்து தீராத பிரச்சனைகள், உடல் நலம் பெறதல் உள்ளிட்ட வேண்டுதலை வைத்தால் உடனடியாக நிறைவேறும் என்று இப்பகுதியில் உள்ள மக்களால் நம்பப்படுகிறது.

  மேலும் இக்கோயில் திருவிழா வருடாவருடம் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய் பரவல் காரணமாக கோவில் கடந்த ஆண்டு திருவிழா நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தாண்டு இக்கோயில் திருவிழாவிற்காக பெரிதும் காத்திருந்தனர்.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லை முனியப்பன் கோயில் திருவிழா தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முனியப்பன் சாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மேளதாளத்துடன் வீதிஉலா, கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றது.

  அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோழி, சேவல், கிடா வெட்டுதல் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் எல்லை முனியப்பன் கோயில் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  செய்தியாளர்: மதன், நாமக்கல்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal