Home /namakkal /

மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல கூடாது-மின்வாரியம் எச்சரிக்கை

மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல கூடாது-மின்வாரியம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்லக் கூடாது என்று மின்சார வாரியம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், காற்று மற்றும் மழைக்கு மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், பொது மக்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மின் கம்பிகள் அறுந்து கிடப்பது தெரிய வந்தால், மின்கம்பிகளின் அருகில் செல்லாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் மின்தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 94987-94987 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மின்கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவைக்கு ஏற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மழையின்போது பொதுமக்கள் மின் சாதனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

    நாமக்கல் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை மற்றும் சேதாரங்களை உடனுக்குடன் சரிசெய்ய 18 பணியாளா் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.சிவகுமாா் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி