முகப்பு /நாமக்கல் /

ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த முட்டை விலை.. நாமக்கல்லில் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது தெரியுமா?

ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த முட்டை விலை.. நாமக்கல்லில் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது தெரியுமா?

X
ஒரு

ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த முட்டை விலை

Egg Prices Rises | நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரு மாதத்திற்குப் பின் உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகளில் சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம், கேரளா மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்கும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள முட்டைகள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், முட்டையின் விலையை இரு நாட்களுக்கு ஒருமுறை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 5 காசுகள் உயா்வுடன் முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.45-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும், மைனஸ் விலையாக 35 காசுகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலையில் மாற்றமின்றி ரூபாய் 4.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 காசு விலை உயர்ந்து 4 ரூபாய் 45 காசுகள் விலை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கூன் வண்டு தாக்குதலை சாமாளிப்பது எப்படி? தென்னை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

இதேபோல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.80-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.60-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal