முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவால் பண்ணையாளர்கள் அதிர்ச்சி? 6 நாட்களில் இவ்வளவு சரிவா?

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவால் பண்ணையாளர்கள் அதிர்ச்சி? 6 நாட்களில் இவ்வளவு சரிவா?

தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி

தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி

Namakkal Egg Price : நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி சுமார் ரூ.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும், சில்லறை விற்பனைக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9 ம் தேதி ஒரு முட்டை ரூ. 5.65 காசாக உயர்ந்து, முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த புதிய விலை 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21ம் தேதி முதல் முட்டை விலை தொடர் சரிவால் 6 நாட்களில் 75 பைசா சரிவடைந்து இன்று ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டையின் விலை தொடர் சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், வடமாநிலங்களில் முட்டை நுகர்வு குறைவு, தமிழகத்தில் தைப்பூசம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழா போன்ற காரணங்களால் முட்டை விற்பனை கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இதனால் நாமக்கல்லில் கோழி பண்ணையாளர்களில் சுமார் 10 கோடி முட்டைகள் வரை தேங்கி உள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Egg, Local News, Namakkal, Tamil News