ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்வு - ஆம்லெட் பிரியர்கள் அதிர்ச்சி..!

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்வு - ஆம்லெட் பிரியர்கள் அதிர்ச்சி..!

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்வு

Namakkal Egg Price Hike | முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு திட்டத்திற்கு வழங்குவதுடன் வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.

இதன்படி ரூ 5.55 காசுகளாக இருந்த முட்டை விலை ஜனவரி 9-ம் தேதியன்று 10 காசுகள் உயர்த்தி ரூ 5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முட்டை விலை ரூ 5.50 காசுகளாக இருந்தது. அதுவே முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக இருந்தது. அதையும் தாண்டி கடந்த ஒன்றாம் தேதி ரூ 5.55 காசுகளாக இருந்த முட்டை விலை உயர்ந்தது தற்போது அதையும் தாண்டி இன்று முட்டை விலை ரூ 5.65 காசுகள் உயர்ந்துள்ளது.

50 ஆண்டுகால கோழி பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும்.‌ சென்னையில் சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 6 ரூபாய் முதல் 6.50 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், வட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுவதால் முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால் முட்டை விலை உயர்ந்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் முட்டையின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டை விலை அதிகரித்து வரும் நிலையில் ஓட்டல்களில் ஆம்லெட், ஆஃப் பாயில் போன்ற உணவு வகையறாக்களின் விலை உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களை தேடிச் சென்று ஆம்லெட் சாப்பிடுவோருக்கும், இல்லத்தரசிகளுக்கும் முட்டை விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

First published:

Tags: Boiled egg, Egg, Namakkal, Tamil News