பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிப்படிப்புக்கு பிறகு என்ன படிக்கலாம், எங்க படிக்கலாம் என்பது குறித்து ஏற்படும் பல சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு எளிய முறையில் தீர்வு காணும் வகையில் ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற இலவச கல்வி வழிகாட்டி கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் Omega Event மற்றும் JCI Divine இணைந்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கல்வி கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், கல்வி கட்டணம், மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகள், மற்றும் வேலைவாய்ப்பு சந்தேகங்கள் குறித்து நேரடியாக தெரிந்துக் கொண்டனர்.
மேலும் மாணவர்களுக்கு இதுபோன்ற கல்வி வழிகாட்டி கண்காட்சி நடைபெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் ஒரே இடத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் நேரடியாக சந்தித்து அக்கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், கல்வி கட்டணம், வசதிகள் என எளிய முறையில் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சிறப்பு விருந்தினர்கள் கொண்டு கல்வி ஆலோசனை வழங்குவது மூலம் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எந்த துறை தேர்ந்து எடுத்தால் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுகளை எளிய முறையில் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.