முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பசுமை குழு

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பசுமை குழு

இந்த நிகழ்வில் பசுமை நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மோடமங்கலம் நண்பர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலான்மைகுழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அருகே பள்ளி மாணவர்களுக்கு நெகிழிப் பைகளின் தீமையை எடுத்துரைத்து  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பசுமை குழு நண்பர்கள் சார்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தண்ணீர் பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பசுமை நண்பர்கள் குழு மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர். சிறுவயதில் முதலே இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், ஒவ்வொரு மரமும் நம்முடைய அடுத்த தலைமுறை காக்க உதவும், மரம் வளர்ப்போம் என்று கூறினால் மட்டும் போதாது, செயலில் செய்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு மாணவருக்கு மூன்று மரக்கன்று என்ற முறையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் மா, தென்னை ,கொய்யா, மரகன்றுகள் வழங்கினார்கள்.

இதேபோல், மோடமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பசுமை நண்பர்கள் குழு மற்றும் மோடமங்கலம் நண்பர்கள் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிளாஸ்டிக்கை ஒழிப்போம், காகித பையைப் பயன்படுத்துவோம், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்க வேண்டும், சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காகித பைகள் மற்றும் துணிப் பைகள் பசுமை நண்பர்கள் குழு மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். மேலும் இந்த நிகழ்வில் பசுமை நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மோடமங்கலம் நண்பர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலான்மைகுழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

First published:

Tags: Local News, Namakkal