Home /namakkal /

சாலை விரிவாக்கப் பணி: திருச்செங்கோடு நகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சாலை விரிவாக்கப் பணி: திருச்செங்கோடு நகராட்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணிகளுக்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முதல் பள்ளிபாளையம் செல்லும சாலையில் கன்னியாகுமரி வழி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக தோக்கவாடி முதல் பள்ளிபாளையம் வரையில் சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கப்பட்டு சாலையோரத்தில் உள்ள கடைகள், வீடுகள் அகற்றம் செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆலாம்பாளையம் பகுதியில் 70க்கும் மேற்பட்ட தூண்கள் கொண்டு பிரமாண்டமாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், கே.எஸ்.ஆர் கல்லூரிப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் தற்போது அங்குள்ள குடிநீர் குழாய் மாற்றி‌ அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமான ஆவத்திபாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து இப்பகுதியில் வரும் குடிநீர் குழாய் நெடுஞ்சாலை துறையால் புதிதாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படுகின்றன.

    ஆகையால், வியாழன் 21.07.2022 அன்று முதல் 25-ம் தேதி வரை 5 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்று வழியாக புள்ளாக்கவுண்டம்பட்டி நீருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும், இதனால் பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி